Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. அரசு பள்ளிகளுக்கு அடித்த ஜாக்பாட்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நேற்று காலை 10 மணி அளவில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக சட்டப் பேரவையில் திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதித்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழகத்தில் முன்மாதிரி பள்ளிகள் 10 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ள நிலையில் மேலும் 15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகளை அமைக்க ரூபாய் 125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அனைத்து அரசு பள்ளிகளை அடுத்த 5 ஆண்டுகளில் நவீனமயமாக்குவதற்கான “பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்” என்ற திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிதாக 18,000 வகுப்பறைகள் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்படும். அதேபோல் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திறன்மிகு வகுப்பறைகளும், அதிநவீன கணினி ஆய்வகங்கள் இதர பள்ளிகளிலும் உருவாக்கப்படும். இந்த திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 7 ஆயிரம் கோடி செலவில் படிப்படியாக செயல்படுத்தப்படும். மேலும் ரூபாய் 1,300 கோடி செலவில் வரும் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |