தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கமானது சென்னையில் உள்ள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மனுவில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்திரன் மற்றும் மாநில பொது செயலாளரான தினேஷ்குமார் ஆகியோர் கூறியுள்ளதாவது, பொது வினியோக திட்ட நியாயவிலை கடைகள் வேலை நேரம் குறித்து நா.க.எண் இ.சி 2/4492/2022, நாள் 25/2/2022 ன்படி சுற்றறிக்கை ஒன்று வந்துள்ளது. அந்த சுற்றறிக்கையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வேலை நேரத்தை மாறுதல் செய்யக்கோரியும், மற்ற பகுதிகளிலும் வேலை நேரத்தில் ஒரே மாதிரியான முறை அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் பணியாளர்கள் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளவற்றை போக்குமாறு கீழ்கண்டவாறு தெரிவித்து கொள்கிறோம். அதன்படி கீழே பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய முறைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
*ஒரே நாடு ஒரே ரேஷன் சட்டம் இன்று நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் எந்த நேரமும், எந்த கடையிலும் பொருள்கள் வாங்கலாம் என்ற நிலையில் சிரமம் இல்லாமல் பொருள்கள் பெற்று செல்கின்றனர்.
*அதன் பின் பயோமெட்ரிக் அமல்படுத்திய பின் அனைத்து கடையிலும் பொருள்கள் இருப்பு நிலையில் இருந்தாலும், டிஎன்பிடிஎஸ் ஆப்பில் சென்று கடைகளில் இருப்பு தன்மை குறித்து அறிந்து கொண்டு, அதன்பின் பொருள் வாங்க ஏதுவான நிலையில் பொருள்கள் சிரமமின்றி மக்கள் பெற்று செல்வதாக தெரிவித்துள்ளது.
*மேலும் முதல் இரண்டு வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் ஞாயிற்றுகிழமைகளில் கடைகள் திறந்து இருப்பதால் மக்கள் பொருட்களை சிரமமின்றி பெற்று செல்கின்றனர்.
*இதையடுத்து டோக்கன் மூலம் கொரோனா காலத்தில் தினமும் 60 முதல் 120 வாடிக்கையாளர்கள் வரை வாங்கிய நிலையில், இந்த உத்தரவால் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்த்து எளிதாகவும் பொருள்கள விநியோகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் வேலை நேரமானது காலை 8 மணி முதல் 2 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் மக்கள் சிரமமில்லாமல் பொருட்களை பெற்று சென்றனர் .
*அதன்பின் வெள்ளிகிழமைகளில் ரேஷன் கடைகள் விடுமுறையாக இருந்தாலும், நுகர்பொருள் வாணிப கழக இடங்கள் வேலை நாளாக உள்ளதால், பொருள்களை நியாயவிலை கடைகளுக்கு நகர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், வெள்ளிக்கிழமை அன்று வேலை செய்யவேண்டிய சூழ்நிலையாக கருதப்படுகிறது.
*மேலும் சுமார் 90 சதத்திற்கும் மேல் ரேஷன் கடை பணியாளர்கள் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் பணிபுரிய வேண்டிய நிலையும், அவர்கள் காலையில் 7.30 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் வீடு திரும்புவதற்கு 8.30 மணி ஆகிவிடுகிறது. ஆக மொத்தம் 12 மணி நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
*எனவே இடைவெளி நேரத்தை ஒரு மணி என்ற நிலையில் மாற்றுமாறு வேலை நேரம் அமைய வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் காலை நேரத்தில் சரியாக 8.30 மணிக்கு வருவதற்கும் மற்றும் இரவு 7 மணிக்கு மேல் விற்பனை தொகையை எடுத்து செல்வதற்கும் உள்ள இடர்பாடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*இதை அடுத்து நியாய விலை கடையில் வேலை நேரம் காலை 9 மணி முதல் 10 மணி வரை என்றும் அதன் பின் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்க வேண்டும்.
*அதேபோல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக வேலை நேரம் அமைந்திடவும் தகுந்த சுற்றறிக்கையை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசுக்கு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.