Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000…. கொடுப்பீங்களா முதல்வரே?…. அண்ணாமலை விமர்சனம்….!!!!

நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக சட்டப் பேரவையில் திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதித்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

திமுக கூட்டணி கட்சிகள் தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இருப்பினும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார். அதாவது தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழக பட்ஜெட்டில் மாநில அரசு மத்திய அரசின் திட்டங்களை பெயர்சூட்டி அறிவித்துள்ளது. இன்னும் திமுக சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இந்த பட்ஜெட் தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாமல் “பகல் கனவு பட்ஜெட்டாக” உள்ளது. தமிழக பட்ஜெட்டில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உயர்கல்வியினை பயிலும் போது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல் நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |