Categories
உலக செய்திகள்

OMG….!! “8ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட புதின்”…. என்ன விழா தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

மாஸ்கோவில் லுஸ்னிகி மைதானத்தில் வைத்து நடைபெற்ற விழாவில் புதின் கலந்து கொண்டார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டம் லுஸ்னிகி மைதானத்தில் வைத்து கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியதற்கு 8ஆம் ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மைதானத்துக்கு வெளியேயும், உள்ளேயும் திரண்டு இருந்ததாக மாஸ்கோ போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரபல பாடகர்  ஒலெக் காஸ்மனோவ் இசை நிகழ்ச்சி நடத்தினார். மேலும் ரஷ்ய அதிபர் புதினை பலர் “உக்ரைனில்  நாஜியிசத்தை  எதிர்த்து புதின் போராடுகிறார்” என்று பாராட்டி பேசி உள்ளனர்.

Categories

Tech |