Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்தி இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் பாண்டி சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் சிறுவயதிலேயே தவறிவிட்டதால் தனது 2 சித்திகளுடன்   வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டி சுதாவின்  சித்தி ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டி சுதா  தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும்  மண்ணெண்ணையை  ஊற்றி   தீக்குளித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த பாண்டிசுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பாண்டி  சுதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |