Categories
மாநில செய்திகள்

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு…. விரைவில் இதை செய்யணும்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சார்பதிவாளர் அலுவலகங்களில் மேல் தளங்களில் செயல்பட்டுவரும் அலுவலகங்களுக்கு லிப்ட் வசதியை உடனடியாக அமைப்பதற்கு பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது: “36 சார் பதிவாளர் அலுவலகங்களில் 3-லில் மட்டுமே லிப்ட் வசதி உள்ளது. மீதமுள்ள 33 அலுவலகங்களில் லிப்ட் வசதி இல்லை.

இதில் 17 அலுவலகங்கள் தனியார் கட்டிடங்களிலும், 16 அலுவலகங்கள் அரசு கட்டிடங்களிலும் செயல்பட்டு வருகின்றது. தனியார் கட்டிடங்களில் இயங்கும் 17 அலுவலகங்களை ஒரு வாரத்துக்குள் தரைதளம் உள்ள தனியார் கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும். 16 அரசு கட்டிடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு உடனடியாக லிப்ட் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |