Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலி…. பற்றி எரிந்த அடுக்குமாடி கட்டிடம்…. பதற்றத்தில் மக்கள்….!!

ரஷ்ய படைகள் 5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 

உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், தலைநகரான கீவ் நகருக்கு அருகே பொடில் மாவட்டத்தில் உள்ள 5 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், உக்ரைன் நாட்டு அரசின் அவசரகால சேவை துறை தகவலை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |