2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பயிர்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக ரூ.2,399 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடாக ரூ 2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்கத் தேவையான நிதி உதவி வழங்கப்படும். முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ 1 லட்சம் நிதியுதவி அளித்து வேளாண் தொழில் தொடங்க உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.