Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரோட்டில் விசில்…. கண்டித்த ஆசிரியர்…. பின் மாணவன் எடுத்த சோக முடிவு..!!

பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாக்கு  உட்பட்ட   வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில்  உள்ள மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் சேலம் அழகாபுரத்தில் டீ கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு 15 வயதான சஞ்சய் என்ற மகன் உள்ளார். சஞ்சய் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வருவதற்கு பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளான்.

அப்போது ரோட்டின் மறுபக்கம் நின்று உள்ள தனது நண்பனை சஞ்சய் விசில் அடித்து கூப்பிட்டுள்ளான். இதை பார்த்த ஆசிரியர் நேற்று பள்ளிக்கு சென்ற சஞ்சயை வன்மையாக கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சஞ்சய் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு கொண்டுள்ளான். இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்த கருப்பூர்  காவல்துறை இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று சஞ்சய்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |