Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த டெல்லி அரசு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை டெல்லி அரசு நிராகரித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை இன்று நிராகரித்துள்ளது. இந்த மனு தற்போது டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கும், அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.

23 வயதான நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலத்த காயம் அடைந்த நிர்பயா சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Categories

Tech |