Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. பணமில்லா பரிவர்த்தனை…. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு…..!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வேளாண் துறைக்கான பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தபோது, விவசாயிகள் இடுபொருள்களைப் பெறும்போது பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். மேலும் உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை, விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |