அட்டகாமா பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள டியகோ டி அல்மாக்கோ நகரத்தை மணல் புயல் தாக்கி உள்ளது.
சிலியில் நாட்டின் வடக்கே உள்ள டியகோ டி அல்மாக்கோ நகரத்தை ராட்சத மணல் புயல் தாக்கியது போன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இச்சம்பவத்தால் சுமார் 9 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவில் அட்டகாமா பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த நகரத்தை நோக்கி ராட்சத புழுதி நகர்ந்து வருவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில் அந்நகரில் வானிலை மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது.