Categories
மாநில செய்திகள்

கணினிமயமாகும் உழவர்சந்தை…. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு….!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

● வேளாண் விற்பனை சார்ந்த சேவைகள், செய்திகள் மற்றும் உழவர் சந்தை விலை ஆகியவை கணினி மயமாக்கப்படும்.
● விவசாயிகள் இடுபொருட்கள் மற்றும் விலை பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக சாலைகள் அமைக்க ரூ.604 கோடி ஒதுக்கீடு.
● 10 குதிரை திறன் வரையிலான சூரிய சக்தியால் இயங்கும் 3000 பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

Categories

Tech |