2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
●கல்வராயன் மலை, கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில்ரூ. 1,250 ஏக்கரில் பூண்டு சாகுபடி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
● கல்வராயன் மலை, கொல்லி மலை உள்ளிட்ட இடங்களில் பூண்டு சாகுபடிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8000 வழங்கப்படும்.
● பனைமரம் ஏறும் சிறந்த கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கப்படும்.
● குடை மிளகாய், வெள்ளரி, தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 25.15 கோடி நிதி ஒதுக்கீடு.