Categories
மாநில செய்திகள்

அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில் காய்கறி மற்றும் பழத்தோட்டங்கள் அமைக்கப்படும். இது விவசாயம், ஊட்டச்சத்து குறித்து மாணவர்கள் அறிய உதவும். பண்ணை சாகுபடி முறையில் இயந்திரமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க ரூபாய் 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 10 இடங்களில் புதிய உழவர் சந்தைகள் அமைக்க ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

Categories

Tech |