உக்ரைன் போர் காரணமாக குழந்தைகள்,பெண்கள் மெட்ரோ சுரங்கப் பாதைகளில் வந்து தஞ்சம் அடைந்து அவதிப்படுகின்றனர்.
உக்ரைன் தலைநகரம் கீவ்வில் போர் காரணமாக ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 24வது நாளை எட்டிய நிலையில் இந்த சுரங்கப் பாதைகளில் வாழும் மக்களின் வாழ்க்கை பரிதாப நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
மேலும் அங்கு தங்கி இருக்கும் மக்கள் பொழுது போக வழியில்லாமல் உணவு தண்ணீர் கிடைப்பது அரிதாகவும், குளிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் , தூங்குவதற்கும் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் உயிரை பணையம் வைத்து தங்கள் வீடுகளுக்கு சென்று திரும்பி இந்த சுரங்கப்பாதைக்கு வருகின்றோம் என்றும், இரவில் நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்கள்.