ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த உக்ரைன் நாட்டின் நடனக்கலைஞர் ல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் உக்ரைன் நாட்டின் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில், 43 வயதுடைய அந்நாட்டின் பாலே நடன இயக்குனரான ஆர்டியோம் தத்சிஷினுக்கு காயம் ஏற்பட்டது.
எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த மூன்று வாரங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக பலியானார். அவர், உக்ரைனில் தேசிய அளவிலான சிறந்த நடன கலைஞராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.