மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மார்ச் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த வருடம் ஜூலை மாதம் பந்தக்கால் முகூர்த்தம் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. தற்போது கோவிலுக்கு வர்ணம் தீட்டும் பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் 23- ஆம் தேதி (புதன்கிழமை) யாகசாலை பூஜைகள் தொடங்கி 27 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான ஹோமம் வளர்ப்பதற்காக யாகசாலை அமைக்கும் பணியானது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு பணிகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.