ஐவாட் என்ற பகுதியில் தீடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஜப்பானிய நாட்டில் வடகிழக்கு மாகாணத்தில் ஐவாட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று இரவு 11: 25 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 18 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியுள்ளது. இதனால் மக்கள் பயந்து தங்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.