Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நிலத்தில் பயிரிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் உத்தரவின்படி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமிரி மரத்தூர் கிராமத்தில் வசிக்கும் நடராஜன் என்பவர் தனது நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்துள்ளார். இதனையடுத்து அதனை காயவைத்து பொட்டலம் கட்டி நிலத்தில் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நிலத்தில் மொத்தம் சுமார் 6 கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடராஜனை கைது செய்ததோடு அவர் மறைத்து வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |