Categories
மாநில செய்திகள்

2023 ஏப்ரல் 1 முதல்… அரசு துறைகளில் இனி கட்டாயம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

அனைத்து அரசுத்துறைகள் கொள்முதல்களுக்கும் 2023 ஏப்ரல் 1 முதல் மின்னணு வழி கொள்முதல் முறை கட்டாயமாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி நடைமுறையில் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான முறைகளை சீரமைப்பது மிகவும் முக்கியம். கொரோனா  தொற்று  இந்த தேவைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. பணியமர்த்தல் மற்றும் பயிற்சிகளுக்கான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் பணியை இந்த ஆண்டு துவங்கி இருக்கிறோம்.

மேலும் மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை 6 மாதத்திற்குள் முன்மொழிய ‘மனிதவள சீர்திருத்தக் குழு’ அமைக்கப்படும். அரசு  சொத்துக்களை முறையாக கணக்கிடுவதற்கு அவற்றின் பயன்பாட்டை கண்காணிக்க ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்துடன் இணைந்து ஒரு சொத்து மேலாண்மை மென்பொருள் அறிமுகம் செய்யப்படும். அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு உரிய பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி அலுவலர் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் நான்கு மாதங்களில் அறிக்கை வழங்கும் வெளிப்படை தன்மையுடன் கூடிய நிர்வாக தீர்ப்பு வழங்குவது அரசின் முக்கிய நோக்கமாகும். இதனை உறுதி செய்வதற்கு 2023 ஏப்ரல் 1 முதல் அனைத்து அரசு மற்றும் பொது நிறுவனங்களில் மின்னணு வழி கொள்முதல் முறை கட்டாயம் ஆக்கப்படும். மேலும் இதற்கான சட்ட விதிகளில் தேவையான சீர்திருத்தங்கள் செய்யப்படும். இனி வரும் ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வோம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |