பழைய தாலுகா அலுவலகத்தில் ஏழை மக்கள் குடியிருப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே நியூபறக்கின்கால் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 450 வீடுகள் இருக்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ஜோசெப் பள்ளி எதிரில் இருக்கும் பழைய தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
மேலும் சொந்த நிலம் மற்றும் வீடுகள் இல்லாத நலிவடைந்த மக்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என ஆட்சியர் கூறியுள்ளார். இந்த வீடு ஒதுக்கப்பட்டவர்கள் 76,000 ரூபாய் பணம் கட்ட வேண்டும். இதற்கான விவரங்களை கேட்டறிய 7871941910, 9994042100 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.