Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட்…. “பயனுள்ளதாக இருக்கிறது”…. தொழில் துறையினர் கருத்து..!!

தமிழக பட்ஜெட் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதாக தொழில் அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து கோவை தொழில் துறையினர்  கருத்து தெரிவித்தனர். அதில் கொடிசியா தலைவர் வி. ரமேஷ் பாபு கூறியது, தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 4.15 சதவீதத்திலிருந்து 3.08 சதவீதமாக குறைத்ததை பாராட்டுகிறேன். சிறு குறு நடுத்தர தொழில் துறை களுக்கு 911.50 கோடி ஒதுக்கீடும் மற்றும்  தொழில்துறைக்கு ரூபாய் 3,267.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை, பெரம்பலூர், வேலூர், திருவள்ளூர்  ஆகிய மாவட்டங்களில் ரூ 50,000 கோடி முதலீட்டை கவரும் வகையில்  புதிய தொழிற் பூங்காக்கள்  உருவாக்கபடுகிறது.

தமிழகத்தில் புதிய தொடங்க நிலை நிறுவனங்களை உருவாக்கதற்கு  ரூ.50 கோடி  ஆதார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தாக்க திட்டம் மற்றும் தமிழ்நாடு   ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக  கூடுதலாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்  இண்டஸ்ட்ரி 4.0 என்ற நவீன தொழில்நுட்பத்தை எதிர்கொள்கின்ற  வகையில்  தொழிற்பயிற்சி பள்ளிகளை அமைக்க ரூ 2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தொழிற்சாலையில்  பணி செய்யும் பணியாளர்களின்  தேவையை ஈடு செய்கின்ற  வகையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உடன் இணைந்து திறமையான  தொழிலாளர்களை உருவாக்க நல்ல  திட்டம். மேலும் அவர் கூறியதாவது, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக ரூபாய் 300 கோடி மற்றும் தமிழ்நாடு கடனுறுதி திட்டத்துக்கு ரூ 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகளவில் அந்நிய செலாவணியை ஏற்றுமதி யின் மூலம் கோவையில் அமையவுள்ள  தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 5 கோடி ஒதுக்கீடு, மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்த அறிவிப்பை கொடிசியா வரவேற்கிறது. மேலும் அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலை குறித்து தீர்வு அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 6 சதவீதம் வட்டி மானியத்தை நீட்டித்துள்ளது.

ஒற்றை சாளர அனுமதி அறிமுகம், வங்கிக் கடனுக்காக பத்திரப்பதிவு கட்டணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், உற்பத்திகாக சிறப்பு பொருளாதார மண்டலம், புதிய உட்கட்டமைப்பு வசதிகளை கோவையில் உருவாக்க நிதி ஒதுக்கீடு இவையெல்லாவற்றையும் மாநில அரசு கவனித்து சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் தீர்வு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில்  வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியது, 1 ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்க ரூ15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டம் ஒதுக்கீடு, மாநில நீர்வளத்துறைக்கு  ரூ 7 ஆயிரத்து 338 கோடி ஒதுக்கீடு, புதிய 6 ஒருங்கிணைந்த குடிநீர் திட்டங்களை இந்த நிதியாண்டில் தொடங்குதல்.

தொழிற்சாலையில்  பணி செய்யும் பணியாளர்களின்  தேவையை ஈடு செய்கின்ற  வகையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உடன் இணைந்து திறமையான  தொழிலாளர்களை உருவாக்க நல்ல  திட்டம். கோவையில் தென்னைநார் வளர்ச்சிக் கழகம் அமைப்பதற்கு  ரூ 50 கோடி ஒதுக்கப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழில் மறுமலர்ச்சிக்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சுந்தரதேவன் தலைமையிலான குழுவின் அறிக்கையில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் பட்ஜெட்டில் இடம் பெறதாது ஏமாற்றத்தை தந்துள்ளது.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ரவி சாம் பேசியதாவது,  இந்த பட்ஜெட் முழுமையான வளர்ச்சி சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. ஜவுளித் தொழில் தமிழ்நாட்டில்  மிகப் பெரிய தொழிலாக இருக்கிறது என்பதால் செயல்பாட்டின் அளவை  ஊக்குவிக்கும். புதிய தொழில் பூங்காக்களை உருவாக்குவதன் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டும். மாநிலத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கே வி கார்த்திக் கூறியதாவது, இந்த நிதிநிலை அறிக்கை தமிழகத்தின் மிகப் பெரிய மாற்றத்திற்கான தொடக்கம். அதற்கு எந்த சந்தேகமும் இல்லை.  தமிழகத்தின் நிதி பற்றாக்குறை 3.80 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது  சிறந்த நிதி மேலாண்மையை காட்டுகிறது. இந்த பட்ஜெட்டில்  புதியதாக  தொழில் பூங்கா கோவையில்  அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் எங்களுக்கு பல வருட கோரிக்கை நிறைவேற்றபட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தொழில்துறை மேம்பாட்டிற்கு என்று பல அம்சங்கள் இருக்கிறது. தமிழ்நாட்டில்  2 எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் நிறுவப்படும் என்று அறிவிப்பு மகிழ்ச்சியை  கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |