பள்ளி சென்ற முதல் நாளிலேயே வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொருக்காத்தூர் கிராமத்தில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ், சர்வேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜோதி மற்றும் அவருடைய மனைவி ராணி ஆகிய இருவரும் தங்களின் முதல் மகன் விக்னேஷ் படிக்கும் அதே பள்ளியில் 2-வது மகன் சர்வேஷையும் நேற்று எல்.கே.ஜி. சேர்த்து விட்டு வீடு திரும்பினர். இதனையடுத்து பள்ளி முடிந்ததும் சர்வேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சக மாணவர்களுடன் பள்ளி வேனில் வீடு திரும்பினர். இந்நிலையில் வேன் கொருக்காத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் நிறுத்தப்பட்டது.
மேலும் பெற்றோரும் தங்களது குழந்தைகளை அழைத்து செல்ல நின்று கொண்டிருந்தனர். இதேபோன்று சர்வேஸ்வரனை வீட்டிற்கு அழைத்து செல்ல பெற்றோர் காத்து கொண்டிருந்தனர். ஆனால் கவனக்குறைவாக டிரைவர் சர்வேஷ் கீழே இறங்குவதற்குள் வேனை ஓட்டியுள்ளார். இதனால் கீழ் தடுமாறி விழுந்த சர்வேஷ் வேனின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பார்தாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து வேனை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்த சர்வேஷின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய தனியார் பள்ளி வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.