ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன், மாலை வேளையில் வீட்டில் குளித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராணுவத்தில் சுபேதார் அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் சத்தம் போட்டு அலரவும், வீட்டில் இருந்த அவரது கணவர் பதறியடித்து ஓடி வந்துள்ளார்.
இதையடுத்து இருவரும் சேர்ந்து அந்த உயரதிகாரியை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். உடனே இந்த தம்பதியினர் இச்சம்பவம் குறித்து சக ராணுவ உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளன. இதனையடுத்து அவர்களை ராணுவ அதிகாரிகள் இந்த விஷயம் பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என கூறி வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் மனுவினை கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தங்களுக்கு ஏதேனும் நடந்தால் ராணுவ உயர் அதிகாரிகளே பொறுப்பு என அந்த பெண் விவரமாக தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து போலீசார் அந்த 4 உயர் அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது பற்றி பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பு அதிகாரி அமிதாப் சர்மா கூறுகையில், ஜோத்பூர் ராணுவ நிலையத்தில் உள்ள ராணுவ வீரரின் மனைவி, உயர் அதிகாரிகளுக்கு எதிராக எப்ஐஆர் பதிவில் குறிப்பிட்டுள்ள, கடுமையான குற்றச்சாட்டுகள் மீது இந்திய ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.