சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு ஹோட்டல் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் ஜான்சன், சதீஷ்குமார், சிலுவை பிரான்சிஸ், கிருஷ்ணமூர்த்தி, ராஜா, முத்துராமன், வள்ளிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 7 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த ரூ.25 ஆயிரத்து 500 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.