கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா -ஒய் ஒசக்கோட்டை இடையே தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து காலை வேளையில் மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் உட்பட 80 பயணிகளுடன் பேருந்து சென்றுள்ளது. அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேல் அமர்ந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாவகடா தாலுகா, பளவள்ளி டவுன் அருகேயுள்ள ஏரி மீது சென்று கொண்டிந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சம்பவ இடத்திலேயே 4 மாணவர்களும் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த அடைந்துள்ளனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.