தமிழகத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்க 19,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசு ஊழியர்களின் அளவில் தொடர்ந்து அக்கறை செலுத்தி பல்வேறு நலன்களை செய்து வருகிறது. அந்த வகையில் திமுக தேர்தலின்போது வாக்குறுதி அளித்து அகவிலைப்படி உயர்வு வழங்கினார். கடந்த ஜனவரி மாதம் முதல் அரசு அகவிலைப்படி 31 சதவீதமாக வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படி 32 சதவீதமாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வாடகைப்படி16 சதவிகிதத்திலிருந்து 18 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்கு 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான ஊழியர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் தேர்தலின்போது வாக்குறுதி அளித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் நேற்று நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால் அது குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க பட்ஜெட்டில் கூடுதலாக 19,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.