Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான பந்தய காளைகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பேருந்து நிலையம் அருகே இருந்த 2 பந்தய காளைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கே.கே.பட்டி சாலை தெருவில் வசித்து வரும் ரஞ்சித் என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் இடத்தில் வைத்து 5 பந்தய காளைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு காளைகளுக்கு தீவனங்களை வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து மறுநாள் காலையில் தீவனம் வைப்பதற்காக ரஞ்சித் சென்ற பொது 5 காளைகளில் 2 காளைகள் திருடு போய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரஞ்சித் பல்வேறு இடங்களில் தேடியும் காளைகள் கிடைக்கவில்லை. இதனால் இச்சம்பவம் குறித்து அவர் கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காளைகளை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |