ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் தியோரி பகுதியில் மம்தா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் கணவர் மற்றும் சுஹானி(5), சிக்கு(2) ஆகிய 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மம்தா தன் 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து இரவு 1 மணியளவில் மம்தா தன் 2 குழந்தைகளுடன் அந்த கிராமத்தில் உள்ள பாசன கிணற்றில் குதித்துள்ளார்.
இந்நிலையில் மம்தாவை தேடிய குடும்பத்தினருக்கு அவர் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்தது தெரியவந்தது. அதன்பின் ஊர்மக்கள் கிணற்றில் குதித்த மம்தாவையும், குழந்தைகளையும் மீட்டு சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் 2 குழந்தைகளும் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். மம்தா மட்டும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்ம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.