Categories
மாநில செய்திகள்

இனி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால்…. பயணிகளுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் சேவையை 54.41 கி.மீ தூரத்திற்கு நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ நிலையம் வரை தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு ஆதரவளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2000 மதிப்புள்ள பரிசு கூப்பன் (அல்லது) பரிசுகள் வழங்கப்படும் என்று 30 நாட்களுக்கு விருப்பம்போல் பயணிக்க ரூ.2500 வைப்பு தொகை மதிப்பு அட்டை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |