Categories
மாநில செய்திகள்

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினருக்காக…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!!

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்தக் கோரிக்கைக்கு இந்திய தலைமை பதிவாளர் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நரிக்குறவன் /குருவிக்காரர் சமூகத்தினரை தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |