புயலின் போது மக்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புயல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம் உதவி கேட்டுள்ளது. இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆற்காடு பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு சென்றுள்ளனர். மொத்தம் 130 பேர் விமானம் மூலமாக செல்கின்றனர். இவர்கள் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் செல்கின்றனர்.