ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். இந்த நிலையில் அடுத்த ஏப்ரல் மாதம் முதல் நாள் அனைத்து வணிக நிறுவனங்களிலும் புது கணக்கு தொடங்கப்படும். இதன் காரணமாக பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வரும் மார்ச் 26, 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள தேங்காய் பருப்பு ஏலத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையில் பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வழக்கமாக புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். தற்போது இம்மாதம் 26, 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய கணக்கு தொடங்கப்பட உள்ளதால் இங்கு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்நாட்களில் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று வழக்கம்போல ஏலத்திற்கு தேங்காய் பருப்பு மூட்டைகள் வரும். இதனிடையில் மார்ச் 31ம் தேதி மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஏலக்கிடங்கில் தேங்காய் பருப்புகளை இறக்கி வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 04294-220524 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் 9677883302 எனும் கைபேசி எண்ணை தொடர்புக்கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.