Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தங்கையின் கணவருடன் கள்ளத்தொடர்பு…. பெண்ணின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பெண் தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் படையப்பா நகரில் இருக்கும் பாழடைந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை வெளியே தூக்கி அதனை அவிழ்த்து பார்த்துள்ளனர். அப்போது சாக்கு மூட்டைக்குள் ஒரு ஆணின் சடலம் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அறிந்த அழகாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி விஜயலட்சுமியும், குமரன் என்பவரும் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துள்ளனர். இந்த வழக்கில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது விஜயலட்சுமியும், குமாரனும் இணைந்து வெங்கடேசனை கொன்று அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்றுள்ளனர். போர்வெல் தொழிலாளியான வெங்கடேசன் மற்றும் விஜயலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் விஜயலட்சுமிக்கு சாந்தி என்ற தங்கை உள்ளார். அவருக்கு கார் ஓட்டுநரான குமரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வெங்கடேசன் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் விஜயலட்சுமிக்கு தேவையான உதவிகளை குமரன் செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறிவிட்டது.

இது குறித்து அறிந்த சாந்தி தனது கணவரையும் அக்காவையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடாததால் சாந்தி தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு குமாரனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் குமரன் அவ்வப்போது விஜயலட்சுமியை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த வெங்கடேசன் கடந்த 10-ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வெங்கடேசனுக்கு குமரனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது தனது மனைவியுடனான கள்ளக்காதலை விட்டுவிடுமாறு வெங்கடேசன் குமரனை எச்சரித்துள்ளார். இதனால் வெங்கடேசன் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலை தொடர முடியாது என நினைத்த விஜயலட்சுமியும், குமரனும் அவரை அரிவாள்மனையால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதன் பிறகு அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |