Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் தாக்கப்படவில்லை”… தீயாய் பரவி வந்த நிலையில் விளக்கமளித்த ப்ளூ சட்டை…!!!

ப்ளூ சட்டை மாறன் அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்ட செய்தியை அவர் மறுத்துள்ளார்.

இயக்குனரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை கடுமையாக விமர்சித்து இவருக்கும் ரசிகர்களுக்கு இடையே இணையத்தில் பல விவாதங்கள் நடந்துள்ளன. ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவரது விமர்சனத்துக்கு திரை பிரபலங்களும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் பி.வி.ஆர் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அஜீத் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து பலரும் கேலி செய்து விமர்ச்சித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் இதை மறுத்திருக்கிறார்.

இதை மறுத்து ப்ளூ சட்டை கூறியுள்ளதாவது, தியேட்டர் என்றால் நாலு பேர் வந்து போவார்கள். இதை மறைந்திருந்து போட்டோ எடுத்ததற்கு பதிலாக நேரில் வந்து எடுத்திருக்கலாமே. இதை ஷேர் பண்ற அளவுக்கு நான் பெரிய பிரபலம் இல்லை. எது எப்படியோ வைரல் மூலம் பிரபலபடுத்தியதற்கு அந்தத் தம்பிக்கு எனது நன்றி” என பதிவிட்டு இருக்கின்றார். ஆனால் ரசிகர்களோ அந்த புகைப்படத்தில் ஏன் உங்க முகம் வீங்கி இருக்கின்றது மற்றும் மரண பயம் முகத்தில் தெரிகிறது என்று விமர்ச்சித்து வருகின்றனர்.

Categories

Tech |