சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொமரலிங்கம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 8-ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி கடந்த 14-ஆம் தேதி முதல் காணாமல் போனதால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் சிறுமியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சிறுமியின் தாய் கொமரலிங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமி எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமி தாராபுரத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியை அங்கு சென்று காவல்துறையினர் மீட்டனர். இதனைதொடந்து சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியும் தாராபுரம் பகுதியில் வசிக்கும் தவசியப்பன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தவசியப்பன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 14-ந் தேதி அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின் தொடர்ந்து 3 நாட்கள் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தவசியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.