பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகப்பெருமானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேப்போன்று மாம்பழப்பட்டு பகுதியில் இருக்கும் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பிள்ளையார்படம் பகுதியில் அமைந்திருக்கும் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.