திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 43,114 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சீர்மிகு நகரம், குடிநீர், புதை சாக்கடை மற்றும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மார்ச் 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியபோது, சீர்மிகு நகர குடிநீர் பணிகள் நடைபெறும் மரக்கடை மலைக்கோட்டை, உறையூர், தென்னூர், அண்ணாநகர், சிந்தாமணி, தில்லை நகர், புதூர் போன்ற பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் புனரமைக்கப்பட்டு 43,114 வீட்டின் இணைப்புகள் புதுப்பிக்கப்பட்ட இருக்கிறது.
இந்த பணிகளையும் 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மேம்படுத்தும் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும். மேலும் குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் நீர் பணி நிலையங்களை, மோட்டார் பம்பு செட்டுகளை புனரமைத்தல், நடைபாதை மேம்பாலத்தை புனரமைத்தல், புதிய மின் மோட்டார்கள் பொருத்துதல் புதிதாக 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீர் தேக்கத் தொட்டி கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
புத்தூா், உறையூா், விறகுபேட்டை, அண்ணாநகா், மரக்கடை, தில்லைநகா், ஆகிய பகுதிகளில் தரைமட்ட நீா்த்தோட்டி மற்றும் மோட்டாா் அறை கட்டுதல் மற்றும் 17 கி.மீ நீளத்திற்கு குடிநீா் உந்து குழாய் பதித்தல் போன்ற பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.மாநகராட்சிக்கு உட்பட்ட 37 வார்டுகளில் புதை சாக்கடை பணிகள் நடைபெறுகிறது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டு இணைப்புகள் 55,155 எண்ணிக்கையில் வழங்கப்படும் இந்த பணிகளை பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத குறிப்பிட்ட காலத்திற்குள் இதனை முடிக்கவேண்டும்.
மேலும் அம்ருத் திட்டத்தின் மேற்கொள்ளப்படும் புதை சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா மாநகராட்சிஆணையா் முஜிபுா் ரகுமான், மாநகராட்சி நிா்வாக பொறியாளா்கள், அனைத்துக் கோட்ட உதவி செயற்பொறியாளா்கள், இளநிலைப் பொறியாளா்கள், ஒப்பந்ததாரா்கள் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.