டிராக்டர் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் பகுதியில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிய டிராக்டர் சென்றது. இதை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திம்மலை அருகே இருக்கும் தனியார் பள்ளியின் முன்பு டிராக்டர் சென்றது. அப்போது வேகமாக வந்த அரசு பேருந்து டிராக்டரின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தியாகதுருகம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.