மன உளைச்சலில் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சல் அருகாமையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர் யார் எந்த ஊரில் வசித்தவர் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இது பற்றி ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்தவர் அப்பாய் தெருவில் வசிக்கும் சுகவனம் என்பதும், குடும்பத்தகராறு காரணத்தால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் ரயில்வே காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சுகவனதிற்கு திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களாக தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். பின்னர் அந்தப் பெண் ஏற்கனவே ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்ற சில தினங்களிலேயே கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் தனது பெற்றோருடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெண்ணின் கணவர் சுகவனம் வீட்டிற்கு சென்று தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு சுகவனம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.