குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது என விழிப்புணர்வு பலகையை காவல்துறையினர் வைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் 25-க்கும் அதிகமான இடங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு பலகை வைத்துள்ளனர்.