குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்ற நபரின் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல்லா. இவர் பெங்களூருவில் நடக்கும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அப்துல்லா உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.