Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி… நகைகள் திரும்ப ஒப்படைப்பு…பணிகள் ஆரம்பம்…!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில்  பெறப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில்  விதி 110-ன் கீழ் நகைகடனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன்  தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

அவ்வாறு போலி நகைகளை வைத்து கடன் வாங்குதல் மற்றும் ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் வாங்குதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதை கருத்தில் கொண்டு தகுதியான நபர்களை மட்டும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நகை கடனுக்காக விண்ணப்பித்தவர்களில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே கடனானது தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்நது  தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள், தகுதியற்றவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிட்டுள்ளது.அதில் நிபந்தனைகளின் படி நகைக்கடன் பெற்ற 48,84 ,726 பேரில் 35,37,693 பேர் தகுதியற்றோர் பட்டியலில் இருப்பதாகவும், மீதமுள்ளோர் தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர்.

இதையடுத்து அனைவருக்கும் நகைக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என நகை அடகு வைத்தவர்கள் அரசை வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த மாதம் முதல் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நகைகள் பல்வேறு மாவட்டங்களில் அளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கான நகைகளை திரும்ப வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மூன்று நகர கூட்டுறவு வங்கி, ஒரு ஊரக வளர்ச்சி வங்கி ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் நகைகள் மற்றும் அவர்களுக்கு உரிய சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |