ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு திரும்பிய தெலுங்கு நடிகை காயத்ரி கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தெலுங்கு திரையுலகில் பல படங்களில் துணை நடிகையாக நடித்துவந்தவர் நடிகை காயத்ரி. இவர் சில வெப்சீரிஸ், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நாடு முழுவது நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டதை முடித்துவிட்டு நடிகை காயத்ரி தன் நண்பருடன் காரில் திரும்பிக்கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கி இருவரும் பலியாகியுள்ளனர். மது போதையில் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.