Categories
மாநில செய்திகள்

மருத்துவ மேற்படிப்பில் யாருக்கெல்லாம் ஊக்க மதிப்பெண்…? தெளிவுப்படுத்திய உயர்நீதிமன்றம்…!!!!

மதிப்பெண் வழங்க கோரி விண்ணப்பித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் தண்டலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார் மருத்துவ மேற்படிப்பு கிராமப்புறங்களில் பணியாளர்களுக்கான ஐந்து சதவிகித ஊக்க  மதிப்பெண்களை வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். அவரது கோரிக்கையை மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு நிராகரித்துள்ளது. இதனை எதிர்த்து அருண்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மாவட்ட தலை நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியதால் ஊக்க  மதிப்பெண் சலுகையை வழங்க முடியாது என்று கோரிய மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் அருண்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி  தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி  ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அதில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளதால் கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்கான என்கிற மதிப்பெண்ணை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதாட பட்டிருந்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஊக்க  மதிப்பெண்கள் வழங்குவதற்காக கிராமப்புறம் மலைப்பகுதி தொலைதூரப் பகுதிகளில் வரையறுத்த நீதிபதி செல்வம் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி மனுதாரருக்கு ஊக்க  மதிப்பெண் பெற தகுதி இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

மேலும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பணியாற்றுவதை ஊக்குவிப்பதற்காகவே மேற்  படிப்புகளில் ஊக்க  மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தவிர நகரங்களுக்கு அருகில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அல்ல என கூறியுள்ளனர். அவருக்கு மதிப்பெண் வழங்கினால் அது ஊக்க மதிப்பெண்கள் வழங்கும் நோக்கத்தையே வீழ்த்தி விடும் என கூறியுள்ளனர்.  நகரங்களில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மட்டுமே ஊக்க  மதிப்பெண் பெற உரிமை உள்ளதாக நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு மதிப்பெண் பெற உரிமை இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Categories

Tech |