தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் ஆற்றங்கரை வழி நடப்பு பகுதியில் பாபு-நதியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் பிரித்தீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நதியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரனை பார்ப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நதியா பிரித்திசையும் தனது தாயுடன் வந்து மாமாவை பார்த்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் பிரித்திஷ் மாமாவை பார்க்க செல்லாமல் தேரோட்டத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கோபம் அடைந்த நதியா பிரித்திஷை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரித்திஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரித்திஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.