இதுவரை அருந்திடாத சுவையான மேலும் மேலும் குடிக்க தூண்டும் தந்தூரி டீ……
இன்றே செய்து பருகிடுங்கள்
தேவையானவை:
- பால் – 4 கப்
- சர்க்கரை – தேவையான அளவு
- டீத்தூள் – 4 ஸ்பூன்
- ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் நான்கு கப் பால் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
அதன்பிறகு நான்கு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
பின்பு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
இறுதியாக ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் அடுப்பை இப்போது மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்தது, மண் பானையை 20 நிமிடங்கள் வரை நல்ல அடுப்பை வேகமாக எரியவைத்து பானையை சூடு படுத்தி வைத்து கொள்ளவும். பின்பு தந்தூரி டீயை வடிகட்டி அப்படியே இந்த சூடுபடுத்திய பானையில் ஊற்ற வேண்டும். டீயானது பானையில் ஊற்றும் போது நன்றாக நுரைத்து வரும்.
அவ்வளவுதான் தந்தூரி டீ தயார். சிறிது நேரம் கழித்த பிறகு இந்த டீயை வேறொரு பாத்திரத்தை மாற்றி கொள்ளுங்கள்.
இந்த சுவையான தந்தூரி டீயை அருந்துங்கள்.