Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

500 ஆண்டுகள் பழமையான மரம்…. வழிபாடு நடத்திய கிராம மக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை..!!

500 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்துவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யன்கோட்டை கிராமத்தில் இருக்கும் மருதாததி ஆற்றின் கரையோரம் மதுரைவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுமார் 100 அடி உயரத்தில் மருதமரம் இருந்தது. இது 500 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

இதனை அறிந்த ஊர் மக்கள் மருத மரத்திற்கு பால் ஊற்றி, சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். மரம் விழுந்த போது ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |