பெண் கூலி படையை ஏவி மாமனார் மாமியாரை தாக்கிய வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கிரசன்புதூர் பகுதியில் முருகசாமி- அருக்காணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சின்னச்சாமி என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த 17-ஆம் தேதி சின்னச்சாமி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனால் வீட்டில் முருகசாமியும், அருக்காணியும் தனியாக இருந்துள்ளனர். அப்போது திடீரென 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தம்பதிகளை தாக்கிவிட்டு நகைகளை திருட முயற்சி செய்தனர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பதியினரை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற குற்றத்திற்காக சரவணன், பிரசாந்த், கவியரசு, சங்கர் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது லதாவிற்கும் பக்கத்து ஊரை சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
இது குறித்து அறிந்த முருகசாமியும், அருக்காணியும் தங்களது மருமகளை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த லதா தமிழரசனிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து லதா தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற சமயத்தில் தமிழரசன் லதாவின் மாமனார் மாமியாரை கூலிப்படையை ஏவி தாக்கியது தெரியவந்துள்ளது. இதனால் லதாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் தமிழரசனை தேடி வருகின்றனர்.